கொரோனா வைரஸ்: போலியான தகவலை பரப்பியவருக்கு விளக்கமறியல்!

Monday, March 30th, 2020

மனித உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான செய்தியை சமூக வலைத்தளம் ஊடாக பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

களுபோவிலையை சேர்ந்த அவர் நேற்று குருநாகல் உஹ-மீயா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். 38 வயதான அவர் அரசியல்வாதி ஒருவரிடம் முன்னர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் பொய்யான செய்தியை பரப்பியதாக கூறப்பட்டு ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட மற்றும் ஒருவர் நாளை 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை பொய்யான செய்தியை பரப்பியதாக கூறப்பட்டு மேலும் 57 பேர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Related posts: