கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

கொரோனா வைரஸ் பரவலானது குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த முறையுடன் ஒப்பிடும் போது இம்முறை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாகவும் குறித்த அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலானது சற்று குறைந்து காணப்படுவதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்றை உரிய முறையில் கையாளப்படாவிட்டால் அது சமூக தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடக குழு உறுப்பினருமான மருத்துவர் வாசன் ரத்ணசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வாள்வெட்டு: ஒரு வாரத்தில் 20 பேர் படுகாயம்!
பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பெயர் ஜனாதிபதியால் நாடாளுமன்ற பேரவைக்கு பரிந்துரை!
நாட்டில் நேற்று மட்டும் 2,429 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!
|
|