கொரோனா வைரஸ்: நேற்றும் இத்தாலியில் 743 பேர் பலி..!

Wednesday, March 25th, 2020

கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியில் நேற்றைய தினம் மாத்திரம் 743 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் அங்கு 5 ஆயிரத்து 249 பேர் புதிதாக இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம் இத்தாலியில் கொவிட் 19 தொற்றால் இதுவரை 6 ஆயிரத்து 820 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் அங்கு 69 ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இத்தாலிக்கு அடுத்தபடியாக நேற்றைய தினம் ஸ்பெயினில் 680 பேர் பலியாகியுள்ளதுடன் இதுவரை 2 ஆயிரத்து 991 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் அங்கு புதிதாக 6 ஆயிரத்து 922 பேர் புதிதாக இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் இதுவரை 42 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பிரான்ஸில் நேற்று 240 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதுடன் அங்கு இதுவரை ஆயிரத்து 100 பேர் பலியாகியுள்ளனர்.

அதனுடன் அங்கு புதிதாக 2 ஆயிரத்து 448 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் இதுவரை 22 ஆயிரத்து 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவில் நேற்றைய தினம் மாத்திரம் 145 பேர் பலியாகியுள்ளதுடன் இதுவரை 648 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் அங்கு புதிதாக கொரோனா வைரசால் 9 ஆயிரத்து 875 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை அங்கு 53 ஆயிரத்து 609 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கமைய உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் குறித்த தொற்றால் இதுவரை 18 ஆயிரத்து 810 பேர் பலியாகியுள்ளனர்.

எனினும் உலகலாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 388 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: