கொரோனா வைரஸ் தொற்று நோயாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு – உலக சுகாதார அமைப்பு!

கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் உலக தொற்று நோய் நிலையாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய புள்ளிவிபரங்களுக்கு அமைய உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 114,285 ஆகும். வைரஸினால் உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 4009 ஆகும். அதில் 3210 மரணங்கள் சீனாவில் பதிவாகியுள்ளன. சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் ஆரம்பமாகிய இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் ஐரோப்பாரவை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததன் பின்னர் இதனை தொற்று நோயாக அறிவிப்பது தொடர்பில் சர்வதேச வல்லுனர்கள், உலக சுகாதார அமைப்பிற்கு அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியமையினால் முழுமையாக இத்தாலி முடக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு மக்களை கொடூர வைரஸிடம் இருந்து பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் குஸேப் கொன்டே தெரிவித்துள்ளார்.
இன்று காலை வரையில் இத்தாலியில் 463 மரணங்கள் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 97 மரணங்கள் பதிவாகியுள்ளது. நாட்டினுள் தொற்றுக்குள்ளானவர்களின் 9172 ஆகும்.
அதற்கமைய சீனாவை அடுத்து புதிய கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக இத்தாலி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய நாடுகளில் மொத்தமாக 14734 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 518 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் இத்தாலியை அடுத்து பிரான்ஸ் நாட்டில் 1209 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 1073 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மன் நாட்டில் 1176 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் 321 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நெதர்லாண்டில் 321 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுவீடனில் 248 பேரும், பெல்ஜியத்தில் 239 பேரும் அயர்லாந்தில் 21 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|