கொரோனா வைரஸ் தொற்று : சீனாவின் பொறிமுறையை பின்பற்றும் இலங்கை!

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தகவல்கள் பெற விரும்புவோருக்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
0710107107 மற்றும் 0113071073 ஆகிய இலக்கங்களே வழங்கப்பட்டுள்ளன. இந்த இலக்கங்களில் 24 மணித்தியாலங்களும் தொடர்புகொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சீனாவின் நடவடிக்கையை பின்பற்றி “மூடிவிடல்” செயற்பாட்டை இலங்கை பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாட்டினால் சீனாவில் தற்போது நாளொன்றுக்கு குறைந்தளவான தொற்றாளர்களே வைத்தியசாலைகளுக்கு வருவதாக ஜாசிங்க தெரிவித்துள்ளார். எனவே இலங்கைக்கு தற்போது சீனாவிடம் இருந்து நோய் அச்சுறுத்தல் இல்லை. ஏனைய நாடுகளில் இருந்து வருவோர் தொடர்பிலேயே அச்சுறுத்தல் இருப்பதாக ஜாசிங்க தெரிவித்தார்
Related posts:
வித்தியா கொலை வழக்கு யாழிலேயே நடத்தப்படும்?
அகதிகளின் பிள்ளைகளுக்கு கல்வியை பெறும் உரிமை - இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றவுள்ள பெண் பொலிஸ் அதிகாரி!
|
|