கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 11பேர் குணமடைந்தனர் – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Saturday, September 5th, 2020

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 918ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மூவாயிரத்து 115 பேரில் இன்னும் 185 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 41 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 12 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: