கொரோனா வைரஸ் தாக்கம்: உலகம் முழுவதும் இதுவரை 2 இலட்சத்து 11 ஆயிரம் பேர் பலி – 30 இலட்சம் பேர் பாதிப்பு!

Tuesday, April 28th, 2020

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இதுவரை 30 இலட்சத்து 55 ஆயிரத்து 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாவும், 2 இலட்சத்து 11 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டது. தற்போது இந்த தொற்று உலகின் 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலகின் பெரும் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்துள்ளது. இன்றையநாள்வரையான தரவுகளின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றினால் 30 இலட்சத்து 55 ஆயிரத்து 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாவும், 2 இலட்சத்து 11 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 9 இலட்சத்து 19 ஆயிரத்து 366 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 19 இலட்சத்து 25 ஆயிரத்து 220 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 56 ஆயிரத்து 446 பேர் அதி தீவிர நிலையில் இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: