கொரோனா வைரஸ் எழுச்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் – உலக சுகாதார மையம் வலியுறுத்து!

Wednesday, May 5th, 2021

இலங்கையில் தினசரி கொரோனா நோய்த்தொற்றுகள் உயர்வதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் எழுச்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது.

இந்த பிரச்சினை இலங்கையை பொறுத்தவரையில் சவாலான அத்தியாயம் என உலக சுகாதார மையத்தின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ஒலிவியா நிவேரஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு மற்றும் முன்னிலைப் பணியாளர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கடும் பிரயத்தனத்தில் ஈடுப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் உலக சுகாதார நிறுவனத்தை பொறுத்தவரையில் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கும் தேவையான உதவிகளை வழங்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சன நெரிசலான இடங்களை தவிர்த்தல் மற்றும் நெருங்கிய தொடர்புகளை குறைத்தல் என்பன கொரோனாவை குறைக்கும் வழிகளாகும்.

எனவே இந்த வழிகளை பின்பற்றி 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் கடுமையான பின் விளைவை ஏற்படுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்றும் உலக சுகாதார மையத்தின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ஒலிவியா நிவேரஸ் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: