கொரோனா வைரஸ்: உலக சுகாதார மையம் விடுத்துள்ள அதி முக்கிய அறிவிப்பு!

Saturday, March 21st, 2020

இளையவர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தவிர்க்கப்பட முடியாதவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் முதியோர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் கோரியுள்ளது.

எனவே இளையவர்கள் அடுத்தவரின் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்ந்து செயற்படவேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 11 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் காவுகொள்ளப்பட்டனர். 250 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இத்தாலியில் நேற்று மாத்திரம் 627 பேர் கொரோனா வைரஸால் மரணத்தை தழுவினர். இந்தநிலையில் அங்கு கொரோனா வைரஸால் காவுக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 4032ஆக அதிகரித்துள்ளது

Related posts: