கொரோனா வைரஸ் : உலகளவில் சுமார் 80,000 பேர் பாதிப்பு!

Wednesday, February 26th, 2020

பல நாடுகளிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700 ஐ கடந்துள்ளது.

அத்துடன் இந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு இதுவரை சுமார் 77,000 க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. உலகளவில் இந்த நோய்த் தொற்று சுமார் 80,000 பேரை பாதித்துள்ளது.

சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் தான் கொரோனா வைரஸ் அதிக பேரை பாதித்துள்ளது. அங்கு 1146 பேர் இதுவரை பாதித்துள்ள நிலையில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியில் 322 பேருக்கு நோய்த்தொற்றும், 10 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

Related posts: