கொரோனா வைரஸின் இரண்டாவது அலை – இலங்கைக்கு சுகாதார தரப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

Tuesday, June 16th, 2020

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இலங்கையில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டு மக்கள் கொரோனா தொற்றை மறந்து செயற்படுவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமுல்செய்யப்பட்ட சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று குறித்து வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனையை பொதுமக்கள் புறக்கணித்து வருவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹானா குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் தொற்றுநோய் பரவும் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில், இதுவரையில் கொரோனா தொற்றினால் ஆயிரத்து 905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: