கொரோனா வைரசு தொற்று சமூகத்தில் அதிகளவு பரவுவதற்கு வாய்ப்பு!

Sunday, June 28th, 2020

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்ற தவறும் பட்சத்தில் கொரோனா தொற்று சமூகத்தில் அதிகளவு பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விடயத்தில் நாம் வெற்றியை அடைந்து விட்டோம் என்று எண்ணுவதற்கான நேரம் இது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தொற்று தொடர்பில் அபிவிருத்தியடைந்துள்ள ஜெர்மனி, நியூஸிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தற்போது என்ன நேர்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள். இந்நாடுகளில் தொற்றுக்குள்ளானோர் மீண்டும் பதிவாகும் நிலை தற்போது அங்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரசு தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்..

Related posts: