கொரோனா மூன்றாம் அலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுமார் 10 ஆயிரம் பேருக்கு தொற்று!

Saturday, June 26th, 2021

கொரோனா மூன்றாம் அலையில் கிழக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் 211 கொரோனா நோயாளர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் A.R.M. தௌபீக் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 49 ஆயிரத்து 926 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 2 இலட்சத்து 14 ஆயிரத்து 668 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 32 ஆயிரத்து 444 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு நாட்டில் 2 ஆயிரத்து 862 பேர் கொரொனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: