கொரோனா முடக்க நிலையில் உள்ள புங்குடுதீவு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் உணவுப்பொருள் வழங்கிவைப்பு!

Saturday, October 10th, 2020

வேலணை பிரதேசத்தின் ஆளுகைக்கட்பட்ட புங்குடுதீவு பகுதியில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணம்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசம் சுகாதார தரப்பினரால் முடக்கப்பட்டுள்தை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் உணவுப் பொருட்கள் வழங்கவைக்கப்பட்டன.

இவ் உணவு பொருட்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தலைமையில் வேலணை பிரதேசத்தின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் குறித்த பகுதிக்கு சென்று அப்பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் மக்களுக்கு வழங்கவதற்கான உணவுப் பொதியை இன்றையதினம் கையளித்திருந்தனர்.

முன்பதாக மினுவாங்கொடாவில் உள்ள பிராண்டிக்ஸ் கார்மென்ட் நிறுவனத்தின் ஊழியர்களூடாக தற்போது நாடு முழுவதும் கொரோன தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பகுதியில் கடந்தவாரம் இந்நோயின் தாக்கத்தடன்  யுவதி  ஒருவர் அடையாளர் காணப்பட்டிருந்தார்.

இதையடுத்து சுகாதார தரப்பினரது ஆலோசரைனக்கு அமைவாக புங்குடுதீவில் 1212 குடும்பங்களை சேர்ந்த 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.  அத்துடன் வேலணை பிரதேசத்திலும் சுகாதர தரப்பினரால் 57 பேர் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த குடும்பங்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் அங்குவாழும் மக்களது பிரச்சினைகள் தொடர்பிலும் அதிகரிகளிடம் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: