கொரோனா மருந்து தொடர்பில் இலங்கையிடம் உதவி கோரிய உலக சுகாதார ஸ்தாபனம்!

Saturday, April 25th, 2020

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையிடம் உலக சுகாதார ஸ்தாபனம் உதவி கோரியுள்ளது.

கொவிட் – 19 எனப்படும் வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பங்களிப்பு செய்யுமாறே உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த அழைப்பினை ஏற்றுக்கொண்டதாக தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் அசித டி சில்வா இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிக்கு தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்பினை இலங்கை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்..

உலகின் பல நாடுகள் கொரோனாவிற்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை, கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களுக்கு வழங்குவதற்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எவிகென் என்னும் மாத்திரையை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: