கொரோனா மரணங்களை அறிக்கையிடும் முறைமையில் மாற்றம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, June 14th, 2021

நாளாந்த கொரோனா மரணங்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்று கையாளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கடந்த தினங்களில் இடம்பெற்ற அனைத்து மரணங்களும், அவை கொவிட் மரணங்களா என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அறிக்கை பிரிதொரு நாளில் வெளியிடப்பட்டு வந்தது.

இதில் சில குழப்பங்கள் காணப்பட்ட நிலையில் இன்றுமுதல் நாளாந்தம் கொரோனா காரணமாக மரணிக்கின்றவர்கள் தொடர்பான விபரங்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதற்கான புதிய பொறிமுறை ஒன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இதுவரை காலங்களில் கொவிட் மரணங்களை உறுதிப்படுத்தும்போது, முன்பு போல, முந்தைய நாட்களில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான தகவல்கள் காலம் தாழ்த்தி வெளியிடப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: