கொரோனா பரிசோதனை தொடர்பான வேலைத்திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார நிர்வாகிகளிடம் கோரிக்கை!

Saturday, April 25th, 2020

கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடத்தப்படும் பரிசோதனை தொடர்பான வேலைத்திட்டங்களை உடனடியாக நாட்டுக்கு முன்வைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது யார் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அவர்களின் முன்னுரிமை வரிசை என்ன, சோதனைகளை மீண்டும் நடத்தும் போது எந்த கால வரையறைக்குள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நடத்தப்படும் பரிசோதனைமுறை தொடர்பில் ஒரு விரிவான நடைமுறை அவசியம் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், சுகாதார அதிகாரிகள் இதுவரை இவ்வாறான அறிக்கையை வெளியிடத் தவறியுள்ளதாகவும் அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

பரிசோதனை நடவடிக்கைகளை விரிவுப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியது.

அப்போது தம்மை விசேட மருத்துவ நிபுணர்கள் எனக் கூறிக்கொண்ட சிலர் தமது சங்கத்தை அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்டு, பரிசோதனைகளை விரிவுப்படுத்த தேவையில்லை என உணரும்படியாக அறிக்கைகளை வெளியிட்டதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது

Related posts: