கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சரவையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Thursday, April 30th, 2020

கொரோனா பரவலை தடுப்பதில் அரசு, புலனாய்வுத்துறை, பாதுகாப்புப் படையினர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற பிரிவுகள் வெற்றி பெற்றுள்ளன என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர், உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஜா-எல, சுதுவெல பகுதியில் ஏற்பட்ட நிலைமை காரணமாக, வெலிசறை கடற்படை வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் முதல் கொரோனா நோயாளர் தொடக்கம் இன்றுவரை கொரோனா தொற்றாளர்களின் இலங்கை விஜயம், அவர்களை கண்டுபிடித்தது மற்றும் புலனாய்வு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று புலனாய்வுத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜானதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, அரச புலனாய்வு சேவையின் உயர் அதிகாரிகள் கொரோனா தடுப்பு திட்டங்கள் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: