கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு புதிய போக்குவரத்து கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு, போக்குவரத்து கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்துதுறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஏதாவது ஒரு பிரதேசத்தில் கொரோனா பரவல் நிலை அறிவிக்கப்பட்டால், அந்தப் பகுதியில் போக்குவரத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான கொள்கையை வகுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையினால், அதன் உரிமையாளர்கள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனை ஏதாவது ஒரு வகையில் முகாமைத்துவம் செய்யும் வகையிலான கொள்கையை வகுக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதையும், நேர அட்டவணையின் அடிப்படையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய நிலையும் உள்ளதாகவும் போக்குவரத்துதுறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|