கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் தொழிற்சங்க போராட்டம் துரதிஸ்டவசமானது – பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Tuesday, July 6th, 2021

சுகாதார சேவைதொழிற் சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக கொரோனா நிலை மோசமடையலாம் என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக தடுப்பூசிவழங்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடியான சூழலில் இருந்து விடுபடுவதற்காக முழு நாடும் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இந்த தொழிற்சங்க போராட்டம் துரதிஸ்டவசமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் மக்களிற்கு தேவையான சேவையை வழங்குவதற்கு சுகாதார சேவையினர் இணைந்து செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார சேவை பணியாளர்கள் சேவையிலிருந்து விலக தீர்மானித்தால் அது நாட்டை பெருமளவிற்கு பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ள ஹேமந்த ஹேரத் சுகாதார துறை மீது மேலும் சுமை சுமத்தப்படலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவத் துறைசார் 14 தொழிற்சங்கங்கள் நேற்றுமுதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சியுடன் நேற்று (05) நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்றும் இந்த போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: