கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு எதிர்கட்சியினரும் ஆதரவுளிக்க வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!

எதிர்கட்சியினர் அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் யதார்த்தபூர்வமான தீர்மானங்களை எடுப்பதில் எதிர்கட்சியினர் சுகாதார அமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் நாமல்ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேநேரம் அரசாங்கம் எதிர்கட்சியின் கருத்தினை மதிப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச எதிர்கட்சியினர் தற்கோதைய சூழ்நிலையில் அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிராது ஆக்கபூர்வமான வகையில் ஆதரவளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பல்கலைக்கழக நடவடிக்கைகளை நவம்பரிற்குள் ஆரம்பிக்க நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப...
பிறப்புச் சான்றிதழில் மாற்றம் - இலங்கை அடையாளத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை!
தனியார் ஊழியர்களுக்கும் சலுகை இழப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி ச...
|
|