கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, April 27th, 2021

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் 77 ஆவது அமர்வின் தொடக்கப் பிரிவில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தொற்றுக்குள்ளனவர்களை கண்டறிதல், தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மூலம் இலங்கை மிகக் குறைந்த இறப்பு வீதத்தையும் அதிக மீட்பு வீதத்தையும் பதிவு செய்துள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் ஏறத்தாள ஒரு லட்சம் இலங்கையர்களை திருப்பி அனுப்பியதுடன், பெப்ரவரியில் தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியது என்றும் தெரிவித்த பிரதமர்  தொற்று நோய்களின்போதுகூட, பல துறைகளில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்தன என தெரிவித்த பிரதமர், ஏற்றுமதித் துறை தொடர்ந்து செயற்பட்டு வந்ததுடன், ஜனவரி மாதத்தில் சுற்றுலா மீண்டும் தொடங்கியது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய வங்கி கொள்கை விகிதங்களை குறைத்து பல சலுகை மறுநிதியளிப்பு திட்டங்களை செயற்படுத்தியது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளதுடன் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை தனது பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதாகவும், தென் – தெற்கு ஒத்துழைப்பை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: