கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்ப உதவியைக் கோருங்கள்: ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரிக்கை!
Saturday, April 18th, 2020இலங்கையில் மேலும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ரஸ்யாவின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் அதிக பரிசோதனைகளே அவசியமாகின்றன. முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல்களை இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். எனவே அதற்கான தொழில்நுட்பங்கள் அவசியமாகின்றன. இந்த விடயத்தில் ஏற்கனவே ரஸ்யா பல நாடுகளுக்கு உதவியிருக்கிறது. இந்நிலையில் அந்த நாட்டிடம் இலங்கை உதவியை கோரமுடியும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரியுள்ளது
Related posts:
புகையிரதம் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது.!
வெளிநாடுகளிலிருந்து வருவோரின் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்!
2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தம் - நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அம...
|
|