கொரோனா தொற்று: 650 ஐ நெருங்கியது இலங்கையின் பதிவு!

Thursday, April 30th, 2020

இலங்கையில் மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பலர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் இலங்கையின் நிலைமை தொடர்பான அறிக்கை ஒன்றையும் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது –

இதனடிப்படையில் குறித்த அறிக்கையில், தற்போதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 649 உயர்வடைந்துள்ளதுடன்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 506 ஆகவும் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இதுவரை இலங்கையின் மருத்துவத் துறையினரால் சிகிச்சையளிக்கப்பட்டு பூரணகுணமடைந்தூர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரியாலை பகுதி  மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம்...
ஒரு மாதகாலத்தின் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட வாய்ப்பு - கல்வியமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவிப...
இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - பிரதமர் தினேஸ் குணவர்தன இடையே சந்திப்பு - இரு தரப்பு உறவுகள்...