கொரோனா தொற்று – யாழ். போதனாவில் மற்றுமொரு மரணம் பதிவு!

Monday, April 19th, 2021

கொரோனா தொற்று காரணமாக யாழில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்பு இன்றையதினம் காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியை சேர்ந்த 59 வயதானவரே யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த 77 வயதானவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த இருவரது சடலங்களும் சுகாதார விதிமுறைகளின் கீழ் மின் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: