கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் – யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020

நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக யாழில் இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

அத்துடன் பேருந்துகளில் பயணம் செய்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து பயணத்தை தொடர அனுமதிக்கப்பட வேண்டும் .

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வண்டியில் பயணம் செய்வோர் அனைவரும் கைகளை கழுவி சுத்தப்படுத்திய பின்னரே பேருந்து வண்டியில் ஏற அனுமதிக்கப்பட வேண்டும்.

பேருந்துகளில் சமூக இடைவெளியை கட்டாயமாக பேண வேண்டும். பேருந்து வண்டிகளில் கட்டாயமாக கிருமி தொற்று நீக்கி மருந்து வைத்திருக்க வேண்டும்.

பேருந்துகளில் புதிதாக ஏறும் பயணிகளிடம் குறித்த கிருமிநாசினி தெளித்த பின்னரே பயணத்தை தொடர அனுமதிக்க வேண்டும்.

முச்சக்கர வண்டிகளில் சாரதியை தவிர இருவர் மட்டுமே பயணிக்க முடியும். கொரோனா தொற்று இன்னும் நாட்டிலிருந்து முற்றாக நீங்கவில்லை என தெரிவித்த அவர் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாராகிய எங்களுக்கும் உள்ளது. எனவே மக்கள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: