கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ‘புதிய வழமை’ கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
Monday, November 9th, 2020மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படுவதையடுத்து கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தயில் ‘புதிய வழமை’ என்ற கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் நடைமுறை ஆரம்பமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றை முன்னெடுத்துச் செல்வதில் கூடுதல் கவனம் தேவை. இதற்குரிய நிபந்தனைகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் நிபந்தனைகளை அனுசரித்து செயற்படுவது பற்றி கவனம் செலுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுள்ளார்.
இதனிடையே கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல் காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 27 பொலிஸ் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில், மட்டக்குளி, முகத்துவாரம், புளுமென்டோல், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ், கரையோர பொலிஸ் பிரிவு, ஆண்டிருப்பு வதி, மாளிகாவத்தை, தெமட்டகொட, வெல்லம்பிட்டி, பொரளை, வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளா தொடர்ந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மெத்சந்த செவன, மிஹி-ஜய செவன, முகத்துவாரம் ரத்மின செவன, தெமட்டகொட சிரிசந்த உயன, மாளிகாவத்தை வீடமைப்புத் தொகுதிகள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டுத் திட்டங்களில் உள்ள மக்கள் வெளியே நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளியாட்கள் அங்கு செல்வதற்கும் தடை வதிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் இந்தப் பிரதேசங்களில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக டெலிவரி சேவைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் உணவு மருந்து மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றிற்கு இந்த பிரதேசத்திற்குள் டெலிவரி (Delivery ) சேவைகளாக செயல்பட முடியும். இருப்பினும் வர்த்தக நிலையங்களை திறக்க முடியாது. இந்த பிரதேசங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வேலைத்திட்டமொன்று வகுக்கப்படும்.
விசேடமாக கொழும்பு வடக்கு மற்றும் மத்திய பிரதேசத்தில் 5 மாடி வீடமைப்புத்; தொகுதிகள் முழுமையாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் உள்ளவர்கள் இதிலிருந்து வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து வகைகளை விநியோகிப்பதற்கு டிலிவரி (delivery ) சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன
Related posts:
|
|