கொரோனா தொற்று: சீனாவுக்கு எதிராக இலங்கையும் வழக்கு!

Saturday, April 11th, 2020

கொரோனா வைரஸை உலக நாடுகளுக்கே வியாபிப்பதற்கு, சீனாவே முழுமுதற் காரணமென குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, சீனாவுக்கு எதிராக வழங்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ், சீனாவின் வுஹானில் இருந்து பரவியது . ஆகையால், கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம், அவ்வமைப்பு கோரியுள்ளது.

அத்துடன் இதற்காக உலகிலுள்ள சகல நாடுகளுக்கும் சீனா நட்டஈடு செலுத்தவேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை சீனாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: