கொரோனா தொற்று சமூக பரவலாவதை தடுக்க நடவடிக்கை – இராணுவ தளபதி தெரிவிப்பு!

கொரோனா தொற்று சமூக பரவலாக மாற்றமடைவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
“அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மைய ஆலோசகர்கள் 8 பேரை விடுமுறையில் இருந்து அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையம் கொரோனா சிகிச்சை நிலையமாகவும் மாற்றப்படவுள்ளது.”என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே புனர்வாழ்வு மைய ஆலோசகருக்கு தொற்று கண்டறியப்பட்டமையினால் இலங்கையில் கொரோனா தொற்றானது சமூக பரவலாக மாற்றமடையும் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரியர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் - நீதிபதி இளஞ்செழியன்!
எமக்கு அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை !
அரிசி இறக்குமதிக்கு தடை – அரசாங்கம்!
|
|