கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு!

Friday, December 11th, 2020

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அக்ரஹார காப்புறுதியில் இவர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 10 நாட்களுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியர்களுக்கு 7 இலட்சம் ரூபாய் பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: