கொரோனா தொற்று எதிரொலி – நாடாளுமன்ற அமர்வுகள் இரு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு!

Monday, January 18th, 2021

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வாரம் இரு தினங்களுக்கு மாத்திரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற அமர்வுகளை நாளை 19 ஆம் திகதி மற்றும் நாளைமறுதினம் 20 ஆம் திகதி ஆகிய இருதினங்கள் மாத்திரம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்பது ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை எப்படி நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்திலேயே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: