கொரோனா தொற்று – உலக அளவில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பூரண நலமடைந்தனர் – சுகாதார அமைப்புகள் தெரிவிப்பு!

Friday, May 1st, 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 இலட்சத்து 42 ஆயிரத்து 874 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி,33 இலட்சத்து 8 ஆயிரத்து 503 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுள்ளதுடன், வைரஸ் பரவியவர்களில் 20 இலட்சத்து 31 ஆயிரத்து 517 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 இலட்சத்து 34 ஆயிரத்து 112 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 10 இலட்சத்து 42 ஆயிரத்து 874 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: