கொரோனா தொற்று: இலங்கையில் ஒரே நாளில் 54 மரணங்கள் பதிவு – அரச தகவல் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, June 9th, 2021

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 54 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,844 ஆக உயர்வடைந்துள்ளது.

இவற்றில் மே 10ஆம் திகதிமுதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 15 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.  

அத்துடன், ஜூன் 2 ஆம் திகதிமுதல் ஜூன் 7 ஆம் திகதிவரை 39 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 பெண்களும் 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். அதேவேளை குறித்த 24 மரணங்களில் 6 பேர் வீட்டிலும், 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதும், 46 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: