கொரோனா தொற்று – இலங்கையின் கணக்கு 219 ஆக உயர்வு!

Tuesday, April 14th, 2020

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரேனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

அத்துடன் தற்சமயம் 155 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிக்கப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனைகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவான தொற்றுறுதியாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை உள்ளது.

மட்டக்களப்பு மற்றும் காத்தான் குடி மருத்துவமனைகளில் பரிசோதனை உபகரணங்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாளவானோர் கண்காணிப்பு மத்திய நிலையங்களில் இருந்தே தொற்றுறுதியாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.

ஆகவே மட்டக்களப்பு மற்றும் வெளிகந்தையில் பி.சி.ஆர் உபகரணங்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்றைய தினம் வரையில் 431 பேரின் உயிரியல் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றில் 216 பேரின் உயிரியல் மாதிரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபடாதவர்கள் என அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்

Related posts: