கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

Thursday, June 30th, 2022

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரேனா தொற்றின் புதிய திரிபு இதுவரை 110 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரஸ் அதனம் கேப்ரியஸஸ் தெரிவித்துள்ளார்.

BA – 4, BA – 5 ஆகிய புதிய கொவிட் வைரஸ் திரிபுகள் தற்போது மக்கள் மத்தியில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் உலகளாவிய ரீதியில் 20 சதவீதமாக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் திரிபுகளுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, உலக நாடுகள் தமது சனத்தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்வர வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தில் பணிப்பாளர் நாயகம் அதனம் கேப்ரியஸஸ் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: