கொரோனா தொற்று அதிகரிப்பு: 2 ஆயிரம் நோயாளர்களை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை!

Friday, April 3rd, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் 2000 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் வாரங்களில் ஏற்படப் போகும் நிலைமையை கருத்திற் கொண்டு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நோய் பரவலை கணக்கிட்டு இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இலங்கையில் காணப்பட்ட நிலைமைக்கமைய ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையில் நோயாளிகளின் எண்ணிக்கை 165 ஆக அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அளவில் நோயாளிகளின் எண்ணிக்கை 340ஐ பதிவு செய்யும் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts:


ப.நோ.கூட்டுறவுச் சங்கங்களுக்கு தீர்வை விலக்களிக்கப்பட்ட பாரவூர்திகள் பெற்றுக்கொடுக்கத்திட்டம்!
கிழக்கின் கொவிட் நிலைமைகள் தொடர்பில் விசேட அவதானம் - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!
பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் - தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் க...