கொரோனா தொற்றுடன் தொடர்ந்தும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை நிலையங்களில்!

Friday, July 2nd, 2021

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் ஆயிரத்து ,883 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதில் புத்தாண்டுக் கொத்தணியில் ஆயிரத்து 815 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியிருந்த 68 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தொற்றுறுதியானவரக்ளின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 60 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்து 55 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நாட்டில் மேலும் ஆயிரத்து 888 பேர், நேற்று கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறினர். இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 27 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்றூன பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 43 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளரினால், நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 3,120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: