கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்தது – சீமாட்டி றிஜ்வே வைத்தியசாலைவைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவிப்பு!

Friday, September 3rd, 2021

சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்ற சிறுவர்களில் 95 வீதமானோர் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்பு 200 ஐ தாண்டியிருந்ததாகலும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளமை மகிழ்ச்சியான செய்தி என்றும் நாடு முடக்கம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக் கப்பட்டமையால் இந்தப் பிரதிபலன் கிடைத்துள்ளது என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் கொழும்பு சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக் காரணமாக நாளாந்தம் சிறுவர்கள் 30 க்கும் 40 க்கும் இடையில் அடையாளம் காணப்பட்டனர் என்றும் தற்போது 10 க்கும் 15 க்கும் இடையிலான கொ ரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானால் வீட்டில் வைத்திருக்க வேண்டாம் என்றும் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ள அவர் சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மருந்துகள் அல்லது ஒட்சிசனுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: