கொரோனா தொற்றுக்கு தீர்வு காணவேண்டுமானால் மக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் – இராஜாங்க அமைச்சர் சன்னஜெயசுமன வலியுறுத்து!

Monday, October 11th, 2021

நாட்டில் அமுல்படுத்துப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வது குறித்து துறைசார் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஆலயங்களிலும் ஏனைய இடங்களிலும் பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவது குறித்து இராஜாங்க அமைச்சர் சன்னஜெயசுமன கவலை வெளியிட்டுள்ளதுடன் இலங்கை இன்னமும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடனடி ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் மக்கள் தங்களின் விருப்பம் போல நடந்துகொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் கொரோனா முடிவிற்கு வந்துவிட்டதுபோல மக்கள் நடந்துகொள்கின்றனர் ஆனால் அது இன்னமும் முடிவிற்கு வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பெருந்தொற்று நீண்ட நாட்களாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் இதற்கு முடிவை காணவேண்டும் என்றால் நாங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: