கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 7 பேர் பலி – நோயால் பீடிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் அதிகரிப்பு!
Monday, November 30th, 2020இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 496 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இந்தநிலையில் நாட்டில் கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,484 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றையதினம் கொவிட்-19 தொற்றுறுதியான அனைவரும் பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணி கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி பேலியகொடை மற்றும் மினுவங்கொடை கொத்தணி கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 19,946 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 346 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17,000ஐ கடந்தது. இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 17,002 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 6,366 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|