கொரோனா தொற்றுக்கு இலங்காகி இதுவரை 64 இலங்கையர்கள் பலி!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 64 இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்படி, கடந்த 6 மாதங்களில் 2,600க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜோர்தானில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் 350க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கடந்த வாரம் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே, கொரோனா தொற்றினால் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
டெங்கு நோயின் தாக்கத்தால் 41ஆயிரம் பேர் பாதிப்பு!
இடம் பெயர்ந்தோரில் 577 குடும்பங்கள் இன்னமும் முகாம்களில்: தனியார் காணிகளை கொள்வனவு செய்து வழங்க அமைச...
எதிர்வரும் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கென வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!
|
|