கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 915ஆக உயர்வு – தொற்றாளர்களில் 480 பேர் கடற்படை சிப்பாய்கள் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, May 14th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 893 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு மேலும் 26 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 524 பேர் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 382 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் இலங்கையில் 09 பேர் குறித்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதுவேளை நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 26 பேரும் கடற்படைச் சிப்பாய்களென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 915 பேரில் 480 பேர் கடற்படைச் சிப்பாய்களென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

பயங்கரவாத தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்ள தொடர்ந்தும் முயற்சிக்கப்படும் - ஜனாதிபதி!
இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன்களின் சலுகைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இந்தியா ஆராய வேண்டும்...
பட்டதாரிகளுக்கு 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் - அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அ...