கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு – 382 பேர் பூரண குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு!

Wednesday, May 13th, 2020

புதிதாக அடையாளம் காணப்பட்ட 2 கொரோனா தொற்றாளர்களை அத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில்

இலங்கையில் இதுவரை 891 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை மருத்துவ பரிசோதமனைகளின் அடிப்படையில் உறுதியாகியுள்ளதுடன் 382 பேர் இவர்களில் மருத்துவ சிகிச்சைகளுக்கு உள்ளான நிலையில் பூரண குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்வுசு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தற்போது வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுடன் 50 பேர் சிகிச்சை பெறு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு இதுவரை இலங்கையில் குறித்த கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் 9 பேர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேரில் 17 பேர் கடற்படையினர் என இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய இருவரும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என்பதோடு அவர்கள் துபாயிலிருந்து இலங்கை வந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

Related posts: