கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,13,769 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் புதிததாக 2 ஆயிரத்து 382 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் 63 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதி செய்யப்பட்டவையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களில் 36 ஆண்களும் 27 பெண்களும் அடங்குகின்றனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 2 இலட்சத்து 80 ஆயிரத்து 868 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அத்துடன் தற்போது 28 ஆயிரத்து 330 பேர் வைத்திய சாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் விரும்பும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றமை எந்த விதத்திலும் பயனற்றது என மருந்து விநியோகம், உற்பத்தி மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையத்திற்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் டெல்டா பிறழ்வு தொற்றினால் அனைவரும் ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|