கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் பூரண குணமடைந்தனர் – வைத்தியர் த.சத்தியமூர்த்தி !

Sunday, April 19th, 2020

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட இருவர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து வரப்பட உள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரே நாளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்தும் 14 நாட்கள் வீடுகளிலேயே இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யாழில் இடம்பெற்ற கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: