கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115: ஒருவர் மரணம் : 9 நோயாளிகள் குணமடைந்தனர் – தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு!

Sunday, March 29th, 2020

             

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் மட்டும்  ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இவர்களுள் 9 பேர் நேற்றையதினம் வரையில் நோய் தொற்றிலிருந்து பூரணமாக குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய, தற்சமயம் 106 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Related posts: