கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
Friday, September 17th, 2021கொரோனா தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 336 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 28 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 96 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மே 7 பொது விடுமுறை!
ரயில்வே பணிப் பகிஷ்கரிப்பு தொடர்பில் சட்டநடவடிக்கை - அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!
பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாட்டில் வாழவே மக்கள் விரும்புகிறார்கள் – மன்னாரில்பிரதமர் மஹிந்த தெரி...
|
|