கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்தது – பலியானோர் எண்ணிக்கையும் 15 ஆயிரத்து 515 ஆக உயர்வு!

Friday, February 4th, 2022

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 440 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 80 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 14 ஆயிரத்து 659 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் இதுவரை 15 ஆயிரத்து 515 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: