கொரோனா தொற்றிலிருந்து இலங்கை விரைவாக மீண்டெழுந்து வருகின்றது – நோய் அறிகுறியுடன் மேலும் 108 பொது மக்களே உள்ளனர் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!
Tuesday, May 12th, 2020உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றிலிருந்து இலங்கை விரைவாக மீண்டுவருவதாக மருத்துவத் துறையினரின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் இன்றும் 23 கொரோனா தொற்றாளர்கள் முழுமையாக குணமடைந்து தத்தமது வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 494 ஆக குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இராணுவத்தினர் அல்லாத பொது மக்களின் எண்ணிக்கை 108 எனவும் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படைச் சிப்பாய்கள் 413 பேர் உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கடற்படையின் கண்கானிப்பின் கீழ் சிகிச்சை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நாட்டினை மீளவும் திறந்து இயல்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் அனைவரும் இதற்கு முன்னர் மிகவும் சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய செயற்படுவது மிகவும் முக்கியம் எனவும் சுகாதார பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.
இயல்வு வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது மீண்டும் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறிய அவர் முழுமையாக கொரோனா ஆபத்து இல்லாமல் போகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார பாதுகாப்புகளை முழுமையாக பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்வரும் 2,3 வாரங்களுக்குள் சாதாரண வாழ்க்கையை வாழ கூடிய சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 869 பேர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 366 பேர் முழுமையாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பில் இதுவரையில் 37600 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்றையதினம் 1057 பிசி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதிமுதல் இதுவரையில் 37 ஆயிரத்து 662 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள
இந்நிலையில் இலங்கையில் இதுவரையில் 869 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 517 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இதுவரை 343 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|