கொரோனா தொற்றின் எதிரொலி – காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

சாலை ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காரைநகர் சாலை வளாகம் மற்றும் பேருந்துகள் கிருமி நாசினிகள் விசிறப்பட்டு வருவதுடன் அப்பிரதேசம் சுகாதார துறையினரால் பொறுப்பேற்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. அதனால் சில தினங்களுக்கு கறித்த சாலையின் சேவைகள் இடம்பெறமுடியாத நிலையும் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்பதாக காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் என எட்டு பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றைய பி.சி.ஆர்.பரிசோதனையில் கண்டறியப்பட்டது
காரைநகர் சாலையில் பணியாற்றுபவர்களில் 90 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையிலேயே, 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சகாதார தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்தே காரைநகர் சாலையிலிருந்து சேவையில் ஈடுபடும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது
இதேவேளை, காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில், அவர் நேற்று இடம்பெற்ற அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளனதால் வடமாகாண இலங்கை போக்குவரத்து சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பொதுப் பொக்கவரத்து சேவையில் ஈடுபடும் குறித்த ஊழியர்கள் பலரதப்பட்ட பிரதேசங்களில் இருப்பவர்களாக உள்ளதுடன் அவர்கள் பலருடன் நெருங்கி பழகுவதற்கான சாத்தியப்பாடுகளும் இருந்துள்ளதால் குடாநாட்டின் பல பாகங்களிலும் குறித்த நோய்த் தொற்றின் தாக்கம் பரவும் நிலையும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|